Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

Monday, February 11, 2019

முழு ஆரோக்கியத்திற்கான செல்வன் அவர்களின் அட்வைஸ்

முழு ஆரோக்கியத்திற்கான செல்வன் அவர்களின் அட்வைஸ்: (இப்போது இருக்கும் 75% வியாதிகளை தடுக்க வழிகள்)
1. வருடம் ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக்கப்
2. ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல்லை டென்டிஸ்ட் மூலம் சுத்தப்படுத்தல் (There is a link between dental and heart health)
3. குழந்தைகளுக்கு கரெக்டான வயதில் தடுப்பூசி. (மிக முக்கியம். ஆதி மனிதன் சுகர், பிரஷரால் சாகவில்லை, இன்பெக்ஷனால் செத்தார்கள்)
4. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை 24 மணி நேர விரதம்.
5. புகையிலை/புகை பழக்கம் இருக்கக் கூடாது. ஜன்க் உணவு சாப்பிடக் கூடாது.
ஆதி மனிதன் உடல் நிலை பெற என்ன செய்ய வேண்டும் என சொன்னார். அது போதாது. உடலும் மனமும் சேர்ந்ததே மனிதன் எனும் ஆத்மா. பேலியோ மனிதனின் மனநிலையை நாம் பெறாமல் நாம் முழு குகைவாசி ஆக முடியாது. டயட் எடுத்தாலும் புழங்கி சாவோம்.
அந்த மனநிலையை அடைய என் உப கருத்துகள்:
1. பிறந்ததிலிருந்து முழு பேலியோ வாழ்வு முறையை அமல் படுத்த வேண்டும்
2. stress வரும் job எனத் தெரிந்து விட்டல், எவ்வளவு சம்பளம் ஆனாலும் சேரவே கூடாது. முக்கியமாக நைட் டூட்டி கூடாது. உயிரை, குடும்ப அமைதியை பிழிந்து எடுக்கும் முதலாளிகளிடம் விசுவாசம், பணம் என்ற காரணங்களுக்காக வேலை பார்க்கக் கூடாது
3. Balanced life- எடை குறைத்து, சர்க்கரை வியாதி மற்றும் lifestyle வியாதிகளை இல்லாமல் ஆக்கி விட்டீர்கள். இனிமேலாவது கோபம், வன்மம், குரோதம், கவலை, பொறாமை, அதீத ஆசை இவற்றை குறைக்க வேண்டும். போதும் என்ற மனமே நியாண்டர் செல்வன் மருந்து என வாழ வேண்டும்.
4. நல்ல ஹாபியும், தியானமும், தூக்கமும் வேண்டும். socalization மிக முக்கியம்.
மேலே சொன்னவற்றை ஸ்டிரிக்டாக கடைப்பிடிப்பதும் பேலியோவில் ஒன்று (உண்மைத் தகவல்.). வாழ்வோம், வாழ வைப்போம்.