Monday, February 11, 2019

LCHF ஸ்பெஷல் எகானமி டயட்

காலை எழுந்தவுடன் க்ரீன் டீ அல்லது ஒரு லெமன் ஜீஸ்
ப்ரேக் ஃபாஸ்ட் - பட்டர் டீ
200 மில்லி பாலில் 40 கிராம் அளவு பட்டரையும் தேவைக்கு ஏற்ப டீ விட்டு செய்யும் பட்டர் டீ ( மூன்று மணி நேரம் பசி தாங்கும்)
மதிய உணவு : 4 முட்டைகள்
மாலை உணவு : 200 கிராம் காய்கறி + 300 கிராம் கீரைகள்+ 50 கிராம் சீஸ்
ஸ்நேக் 1 : க்ரீன் டீ / கால் மூடி தேங்காய்
ஸ்நேக் 2 : ஒரு கொய்யா காய்
ஸ்நேக் 3 : பாதாம் 25கிராம்
இரவு உணவு
100 கிராம் பனீர்+ 2 முட்டை
அல்லது
300 கிராம் சிக்கன்+2 முட்டை
அல்லது
300 கிராம் மீன் +2 முட்டை

இந்த பேலியோ எகானமிக் டயட்டின் மேக்ரோ அளவுகள்
காலை
பாலுடன் பட்டர் டீ
10 கிராம் கார்ப்ஸ்
6 கிராம் புரதம்
36 கிராம் கொழுப்பு
ஸ்நேக்ஸ்
25 கிராம் பாதாம்
2.5 கிராம் கார்ப்ஸ்
12.5 கி கொழுப்பு
5கி புரதம்
மதியம்
4 முட்டை
0 கார்ப்ஸ்
24 கிராம் புரதம்
20 கிராம் கொழுப்பு
மாலை
காய்கறி+சீஸ்
12 கார்ப்ஸ்
16கி கொழுப்பு
15கி புரதம்
இரவு
பனீர்
2 கி கார்ப்ஸ்
23கி கொழுப்பு
15கி புரதம்
முட்டை (2)
0 கார்ப்ஸ்
12 கி புரதம்
10கி கொழுப்பு
மொத்தம்
35கிராம் கார்ப்ஸ்
80கிராம் புரதம்
120கிராம் கொழுப்பு


https://www.facebook.com/farookabdulla1988/posts/1207510175998823?hc_location=ufi

முழு ஆரோக்கியத்திற்கான செல்வன் அவர்களின் அட்வைஸ்

முழு ஆரோக்கியத்திற்கான செல்வன் அவர்களின் அட்வைஸ்: (இப்போது இருக்கும் 75% வியாதிகளை தடுக்க வழிகள்)
1. வருடம் ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக்கப்
2. ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல்லை டென்டிஸ்ட் மூலம் சுத்தப்படுத்தல் (There is a link between dental and heart health)
3. குழந்தைகளுக்கு கரெக்டான வயதில் தடுப்பூசி. (மிக முக்கியம். ஆதி மனிதன் சுகர், பிரஷரால் சாகவில்லை, இன்பெக்ஷனால் செத்தார்கள்)
4. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை 24 மணி நேர விரதம்.
5. புகையிலை/புகை பழக்கம் இருக்கக் கூடாது. ஜன்க் உணவு சாப்பிடக் கூடாது.
ஆதி மனிதன் உடல் நிலை பெற என்ன செய்ய வேண்டும் என சொன்னார். அது போதாது. உடலும் மனமும் சேர்ந்ததே மனிதன் எனும் ஆத்மா. பேலியோ மனிதனின் மனநிலையை நாம் பெறாமல் நாம் முழு குகைவாசி ஆக முடியாது. டயட் எடுத்தாலும் புழங்கி சாவோம்.
அந்த மனநிலையை அடைய என் உப கருத்துகள்:
1. பிறந்ததிலிருந்து முழு பேலியோ வாழ்வு முறையை அமல் படுத்த வேண்டும்
2. stress வரும் job எனத் தெரிந்து விட்டல், எவ்வளவு சம்பளம் ஆனாலும் சேரவே கூடாது. முக்கியமாக நைட் டூட்டி கூடாது. உயிரை, குடும்ப அமைதியை பிழிந்து எடுக்கும் முதலாளிகளிடம் விசுவாசம், பணம் என்ற காரணங்களுக்காக வேலை பார்க்கக் கூடாது
3. Balanced life- எடை குறைத்து, சர்க்கரை வியாதி மற்றும் lifestyle வியாதிகளை இல்லாமல் ஆக்கி விட்டீர்கள். இனிமேலாவது கோபம், வன்மம், குரோதம், கவலை, பொறாமை, அதீத ஆசை இவற்றை குறைக்க வேண்டும். போதும் என்ற மனமே நியாண்டர் செல்வன் மருந்து என வாழ வேண்டும்.
4. நல்ல ஹாபியும், தியானமும், தூக்கமும் வேண்டும். socalization மிக முக்கியம்.
மேலே சொன்னவற்றை ஸ்டிரிக்டாக கடைப்பிடிப்பதும் பேலியோவில் ஒன்று (உண்மைத் தகவல்.). வாழ்வோம், வாழ வைப்போம்.

இந்த பேலியோ உணவுமுறையின் அதிர்ச்சிகள்:

இந்த பேலியோ உணவுமுறையின்  அதிர்ச்சிகள்:



இங்கே எதுவெல்லாம் உண்ணத் தடை.


  • அரிசி. (பொன்னி, கைக்குத்தல், பாஸ்மதி, சுகர் ப்ரீ டயா ப்ரீ அரிசி, பாரம்பரிய அரிசி,ஆர்கானிக் அரிசி)
  • கோதுமை. (குட்டை கோதுமை, நெட்டை கோதுமை, டயாப்ரீ கோதுமை, சப்பாத்தி,ப்ரெட்)
  • மைதா. (கேக்குகள், பரோட்டாக்கள்)
  • பேக்கரி பொருட்கள்.(பேக்கரிகளில் விற்கப்படும் அனைத்தும்)
  • பழங்கள் / ஜூஸ்.
  • அனைத்துவகை இனிப்புகள் (நெய்யில் செய்யப்பட்டதுமுதல், டால்டாவில் செய்யப்பட்டது வரை)
  • தேன், நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுகர் ப்ரீ மாத்திரைகள், ஹீலர் ஜாங்கிரிகள், கேக், அல்வா, இறைவனே கொண்டு வந்து கொடுக்கும் அமிர்தம்.
  • ஓட்ஸ், மேகி, ஹெர்பாலைப், லேகியங்கள், உடல் எடை குறைப்பு மாத்திரைகள்,மருந்துகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, இன்னபிற)
  • பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடி டு குக் உணவுகள் அனைத்தும்.
  • ரிபைன்ட் என்ற வார்த்தையுடன் விற்கப்படும் சன்ப்ளவர், தேங்காய், நல்ல, கடலை ,கடுகு , கனோலா, ரைஸ்பார்ன், டால்டா, பாமாயில் எண்ணெய்கள்.
  • ஜங்க் புட் எனப்படும், குப்பை உணவுகள் அனைத்தும்.
  • அனைத்துவகை பீன்ஸ், கிழங்கு வகைக் காய்கறிகள், அனைத்துவகை கடலைகள், (வேர்க்கடலை முதற்கொண்டு),
  • அனைத்து வகை பருப்புகள், புளி.
  • அனைத்துவகை சோயா பொருட்கள்.
  • காபி, டீ, அனைத்துவகை கூல் டிரிங்க்ஸ், எனர்ஜி ட்ரிங்க்ஸ், சிட்டுக்குருவி லேகியங்கள்.

இந்த உணவுமுறை பற்றி சில அதிர்ச்சிகரமான உண்மைகள்:

இங்கே பரிந்துரைக்கப்படும் உணவுகள் கீழ்வருமாறு:

கிழங்குகளில்லாத, பீன்ஸ் இல்லாத, பருப்புகள் இல்லாத காய்கறிகள்.
பாதாம், பிஸ்தா, மகடாமியா, வால்நட்ஸ்.
மஞ்சள் கருவுடன் முட்டைகள்.
கொழுப்புடன் கூடிய தோல் நீக்காத இறைச்சி வகைகள்.
அனைத்துவகை கடல் உணவுகள்.
நெய், வெண்ணெய், சீஸ், பனீர், முழுக்கொழுப்பு பால், தயிர், மோர்.
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்.
அனைத்துவகை கீரைகள்.

யெஸ், கொழுப்பு, கொழுப்பு, மேலும் கொழுப்பு:

இதெல்லாம் சாப்பிட்டால் மாரடைப்பு வராதா?

டயபடிக் இருப்பவர்களுக்கு சுகர் ஏறாதா? 

உயிருக்குப் பிரச்சனை இல்லையா?  

எல்லாம் போகட்டும், 

இவ்வளவு கொழுப்பு சாப்பிட்டால் எப்படி உடல் எடை குறையும்?